< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 Oct 2022 5:07 PM GMT

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்




குளத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம்


குஜிலியம்பாறை கம்பு குத்தியூர் குளத்தின் கரைப்பகுதி சேதமடைந்துள்ளது. தண்ணீர் மறுகால் பாயும் இடத்தில் லேசான மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் குளத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-கார்த்திக், குஜிலியம்பாறை.


தெருவில் தேங்கும் மழைநீர்


நிலக்கோட்டை பெரியார் காலனி லஷ்மிநகரில் மழைக்காலங்களில் தெருவில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் விஷ பாம்புகளும் தண்ணீரில் நீந்தி செல்கின்றன. எனவே தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- சுகித்ரா, நிலக்கோட்டை.


பன்றிகள் தொல்லை


பழனி சத்யாநகரில் பன்றிகள் அதிகமாக உள்ளது. சாக்கடை கால்வாயில் இறங்கி விளையாடும் பன்றிகள் அப்படியே வெளியே வந்து தெருவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே பன்றிகளை குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வேண்டும்.


-நாகராஜன், பழனி.


கழிவுநீருடன் கலந்து தேங்கும் மழைநீர்


நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு 11-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது.


-பிரபு, எத்திலோடு.


சேதமடைந்து வரும் நூலக கட்டிடம்


சின்னமனூரை அடுத்த அப்பிப்பட்டியில் உள்ள நூலக கட்டிடம் சேதமடைந்து வருகிறது. கட்டிடத்தின் மேற்கூரை சுவர்கள், பக்கவாட்டு சுவர்கள் என பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் நூலகத்துக்குள் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.


-ரவி, அப்பிப்பட்டி.


நாடக மேடை கட்டிடம் சேதம்


ரெட்டியார்சத்திரத்தை அடுத்த புதுச்சத்திரம் அண்ணாநகரில் உள்ள நாடக மேடை கட்டிடம் சேதமடைந்து வருகிறது. கட்டிடத்தில் பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-ரங்கசாமி, புதுச்சத்திரம்.


தாமதமாகும் பாலம் அமைக்கும் பணி


பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் பெரியகுளம் சாலையில் பாலம் அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. இன்னும் நிறைவு பெறாமல் தாமதமாகி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.


-பாலசுப்பிரமணி, பெரியகுளம்.


பள்ளத்தில் தேங்கும் தண்ணீர்


கம்பம் மஞ்சள்குளம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலை சேதமடைந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


-சொக்கராஜா, கம்பம்.


மூடப்படாத பள்ளத்தால் விபத்து


போடி நுழைவு பகுதியான போஜன் பூங்கா பஸ் நிறுத்தம் எதிரே தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்கள் ஆகியும் மூடப்படாமல் உள்ளது. அதில் மழைநீர் தேங்கி இருப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-ராஜ், போடி.


புதர்மண்டி கிடக்கும் கட்டிடம்


போடி அரசு மருத்துவமனை கட்டிடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அங்கு விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே செடி, கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.


-தண்டபாணி, போடி.


Related Tags :
மேலும் செய்திகள்