< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
29 Sep 2022 7:07 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

அரியலூர் கவரை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய் 10 முதல் 12 அடி வரை குழியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் இறங்கி குடிநீர் பிடித்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய்கள் அனைத்தையும் மேல் பகுதியில் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முருகன், அரியலூர்.

கலிங்கு பகுதி சாி செய்யப்படுமா?

அரியலூர் மாவட்டம, தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே உடையவர் தீயனூர் கிராமத்தில் பாக்கனேரி என்று அழைக்கப்படும் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் ஏரியில் தண்ணீரை முழுமையாக நிரம்பாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், உடையவர் தீயனூர்.

சாலையை அகலப்படுத்த கோரிக்கை

அரியலூர் மாவட்டம், வி.கை காட் அம்பலர் கட்டளையில் இருந்து காரைக்குறிச்சி வரை செல்லும் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி அந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி அந்த சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அம்பலவர் கட்டளை.

சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா ?

அரியலூர் புறவழி சாலையில் கிழக்கு பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள சாலையில் தடுப்புச்சுவர் ஏதும் இல்லை. இந்த சாலை வழியாக தினமும் 24 மணி நேரமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

உயர் மின் கோபுரம் சீரமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வி.கைகாட்டி ஆகும். இங்கு அமைந்துள்ள மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு அவ்வபோது எரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிக வேக காற்று வீசியதில் பழுது ஏற்பட்டு எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

மேலும் செய்திகள்