பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வசதி வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்தும் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்குள்ள கிணறுகளில் உள்ள தண்ணீலும் உப்பாக உள்ளது இதனானை பயன்படுத்தி முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், விஜயகோபாலபுரம்.
பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆலத்தூர்.
பொதுமக்களுக்கு இடையூறு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் வ. கீரனூர் கிராமத்தில் தெருக்களில் தினமும் ஏராளமானவர்கள் கூடி உற்கார்ந்து கொண்டு பணம் வைத்து சூதாடி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விநாயக்தீனா, வ.கீரனூர்.
வாகன நிறுத்தம் வேண்டும்
பெரம்பலூரில் புதிய மற்றும் பஸ் நிலையங்கள் தனித்தனியாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பெரம்பலூருக்கு வந்து பின்னர் பஸ்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் (பார்க்கிங்) வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
நாய்கள் தொல்லை
பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை கடிக்க பாய்வதால் பலருக்கு விபத்து ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களை இவை கடிக்க பாய்வதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.