< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
4 Oct 2023 10:53 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், உழவர்சந்தை அருகே இருந்த ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நட்டனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

கரூர் மாவட்டம். அப்பிபாளையம் கிராமம் ஆட்டையாம்பரப்பு பகுதிகயில் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கடை மற்றும் வீடுகளை கட்டி உள்ளனர். இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடக்க கூட முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆட்டையாம்பரப்பு

ஆபத்தான மரத்தை வெட்ட கோரிக்கை

கரூர் மாவட்டம், நெய்தலூர் இந்திரா நகரில் தாய் செய் நல கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் பழைமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் தற்போது உடைந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. தற்போது காற்று காலம் என்பதால் அதிக காற்று அடித்தால் மரம் கீழே விழுந்து விடும். இதானல் தினமும் தாய்சேய் நல அலுவலகத்திற்கு வரும் கர்ப்பிணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், நெய்தலூர்

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், இனுங்கூர் ஊராட்சி, காகம்பட்டியில் இருந்து நந்தவன பள்ளம் செல்லும் தார்சாலை குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றன். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், இனுங்கூர்.

பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் எந்த பஸ்களும் நிற்காமல், 100 மீட்டர் தள்ளி சென்று நிற்கிறது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் ஓடி சென்று அந்த பஸ்சில் ஏறி வருகின்றனர். சிலர் ஓடும்போது கீழே தவறி விழுந்து படுகாயமும் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

லோகநாதன், நொய்யல்

மேலும் செய்திகள்