தென்காசி
தினத்தந்தி புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்துக்கு இடையூறு
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 3-வது வார்டு காந்திநகர் மேலத்தெருவில் இருந்து இருதயகுளம் மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அப்போது பாதையில் இருந்த பாறையை அகற்றாமல், அதைச்சுற்றிலும் சாலை அமைத்ததால், அந்த இடத்தில் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பாதையை மறைத்த பாறையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-தமிழ்வேந்தன், விக்கிரமசிங்கபுரம்.
மின்விபத்து அபாயம்
நெல்லை அருகே சிவந்திபட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் சுடுகாடு அருகில் சாலையோரமாக உள்ள மின்கம்பத்தைச் சுற்றிலும் செடிகள், கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. மின்கம்பத்தின் உச்சி வரையிலும் பின்னிப்பிணைந்து வளர்ந்த கொடிகள், தாங்கு கம்பியிலும் படர்ந்துள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை ஆக்கிரமித்த கொடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-முருகேஷ், சிவந்திபட்டி.
வாறுகால் தூர்வாரப்படுமா?
பாளையங்கோட்டை பெருமாள் சன்னதி தெருவில் வாறுகாலில் குப்பைக்கூளங்களாக கிடக்கிறது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-ஈசுவரி, பாளையங்கோட்டை.
ஆபத்தான மின்கம்பம்
அம்பை தாலுகா வாகைக்குளம் பேச்சியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, விரிசல் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-மணிகண்டன், வாகைக்குளம்.
சுகாதாரக்கேடு
பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டின் பின்பக்க நுைழவுவாயில் அருகில் பல நாட்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-பிச்சையாபிள்ளை, பாளையங்கோட்டை.
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ராமசாமிபுரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக சாந்தி என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
உடன்குடி பேரூராட்சி பிசகுவிளை, கொத்துவாபள்ளி தெரு, பெரிய தெரு, எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது சில வீடுகளில் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் தெருக்குழாய்களில் குறைந்தளவே தண்ணீர் வருகிறது. எனவே இதனை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-காசிலிங்கம், உடன்குடி.
ஒளிராத தெருவிளக்கு
தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் குற்றாலம்பிள்ளை ஓடை மெயின் தெருவின் மத்திய பகுதியில் உள்ள தெருவிளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-கண்ணன், முடிவைத்தானேந்தல்.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
கோவில்பட்டி புதுரோடு தமிழ் பாப்திஸ்து ஆலயம் அருகில் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா தவணை விலக்கு சாமியார்மடம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக மூக்கையா என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குண்டும் குழியுமான சாலை
கடையநல்லூர் யூனியன் அருணாசலபுரத்தில் இருந்து அச்சம்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-பிரபா, இடைகால்.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
கடையநல்லூர்- சேர்ந்தமரம் சாலையில் முபாரக் பள்ளிவாசல் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்ைப சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சைபுல்லா, கடையநல்லூர்.
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து சேர்ந்தமரம் வழியாக தென்காசிக்கு (வழித்தட எண்:-160) செல்லும் பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் சேர்ந்தமரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர். இந்த பஸ் கடந்த சில நாட்களாக மாலையில் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-சார்லஸ், இடைகால்.
சுத்தமான குடிநீர் வினியோகம் அவசியம்
கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரம் பஞ்சாயத்து 3, 6-வது வார்டுகளில் உள்ள வாறுகால் வழியாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டதால், குடிநீரில் கழிவுநீர் கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அங்கு குழாயை மாற்றி அமைத்து, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-முருகேசன், அரியப்பபுரம்.