< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Sept 2023 12:21 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கணினி வழி பட்டா வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா சேந்தமங்களம் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்படப்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1991-ல் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் சேந்தமங்களம் பெரிய குளம் நீர் பாசனத்திற்கு உள்பட சுமார் 360 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு கணினி வழி பட்டா பதிவேற்றம் செய்யபடவில்லை. இதனால் அரசு அறிவிக்கும் எந்த நலத்திட்டத்திற்கும் பயனவடைதில்லை. பயிர் காப்பீடு யெ்வதற்கும் , நெல் கொள்முதல் விற்பனை செய்வதற்கும் ஏதுகூாக கணி வழி பட்டா, சிட்டா வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

சுப்பையா, சேத்தமங்களம்

குவிந்து கிடக்கும் குப்பைகள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி நகரில் காவிரி வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் மஞ்சள்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் கடலுக்கு செல்லும். தற்போது இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டபட்டு உள்ளத. இதனால் தண்ணீர் செல்லமுடியாமல் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மணமேல்குடி.

மின்சார வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு பொது மருத்து வமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் உதவி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி மருத்துவமனை அருகில் உள்ள மின்மாற்றில் காகம் ஒன்று அடிபட்டத்தில் மருத்துவமனையில் உள்ள மின் மீட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்தது. இதனை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் மின்சாதன பொருட்களை சரிசெய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் போலீசார் மின் வசதிகள் இல்லாமல் அவதி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலங்குடி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா அணவயல் பகுதியில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தில் படந்து வளர்ந்து இருந்த செடி, கொடிகளை அகற்றினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், அணவயல்.

கால்நடை மருத்துவமனை தொடங்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே எம்.உசிலம்பட்டி உள்ளது. இதனை சுற்றி சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி உட்பட 15-க்கும் மேற்ப்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே கால்நடை வளர்பவர்களின் கஷ்டத்தை போக்கவும் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும் எம்.உசிலம்பட்டியில் கால்நடை மருத்துவமனை தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், காரையூர்.

மேலும் செய்திகள்