< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Sept 2023 12:19 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வரத்து வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம் தெப்பகுளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்தால் பெரம்பலூர் பெரியஏரியில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால் வழியாக வந்து தெப்பகுளம் நிரம்பி வழியும். இந்தநிலையில் வரத்து வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் ஆங்காங்கே செடி, செடிகள் முளைத்து முட்புதர்கள்போல் காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தும் தண்ணீர் தெப்பகுளத்திற்கு செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மருதையாற்றை விரைந்து சீரமைக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பச்சை மலைத்தொடரில் உற்பத்தியாகி மாவட்டத்தின் பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை இணைக்கும் வகையில் பாய்ந்தோடி அரியலூரில் நுழைந்து கொள்ளிடத்தில் மருதையாறு கலக்கிறது. மருதையாற்றின் பனங்கூர், குரும்பாபாளையம் பகுதிகளில் நிறைய சீமைக்கருவேல மரங்கள், சம்பு உள்ளிட்டவைகள் முளைத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆறு மற்றும் மக்களின் நலன் கருதி விரைந்து மருதையாற்றை சீரமைக்க நீர்வளம்தைப் பெருக்கும் முனைப்போடு செயல்படும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைந்து ஆவண செய்யக் கோருகிறோம்.

பொதுமக்கள், குரும்பாபாளையம்

நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் தேனூர் கிராமத்தில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் ஏராளமானவை வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் தண்ணீர் தட்டுப்பாட்டு உள்ளது. இதனால் கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,தேனூர்

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெம்பாவூர், வடகரை ஆகிய ஊர்களுக்கு இடையில் ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றின் கரைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றனர். இந்த குரங்குகள் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெம்பாவூர்.

ஆனைவாரி ஓடையை சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் மறந்துபோன நீர்நிலைகளில் ஒன்றாக ஆனைவாரி ஓடை விளங்குகிறது. குன்னம், அந்தூர், அசூர், தங்க நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓடைகளாக உற்பத்தியாகி பிறகு ஒன்று சேர்ந்து துங்கபுரம் வழியாக அரியலூர் மாவட்டத்தில் நுழைந்து இறுதியாக வெள்ளாற்றில் கலக்கிறது. இந்த ஆனைவாரி ஓடையானது பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் இருந்த இடமே தெரியாத நிலையில் உள்ளது. ஆனைவாரி ஓடை மற்றும் அதன் கிளைகளை உரிய நிதி ஒதுக்கி முறையாக சீரமைப்பதோடு அருகாமையில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரைத் திருப்புவது தொடர்பாக ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்தவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரவணன்,துங்கபுரம்

மேலும் செய்திகள்