புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கோதுமை, மண்எண்ணெய் தடையின்றி கிடைக்குமா?
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 4000 குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கப்படும் கோதுமை மற்றும் மண்எண்ணெயின் அளவு வெகுவாக குறைக்கபட்டு உள்ளது. ஒரு குடும்பத்திற்கு 1/2 லிட்டர் மண்எண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் அனைவருக்கும் கிடைப்பது இல்லை. இதே போல் கோதுமையும் ஒரு ரேஷன் கடைக்கு 50 கிலோ என்ற அளவிலேயே ஒதுக்கப்படுகிறதாம் இதனால் 90 சதவீத குடும்ப அட்டைகளுக்கு கோதுமை கிடைப்பது இல்லை. முதியவர்கள் அவதிபடும் நிலை உள்ளது. எனவே ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், கோதுமை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கறம்பக்குடி.
சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் உள்ள பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்களாக மண்டி கிடக்கின்றன. இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் தேங்குவது இல்லை. கறம்பக்குடி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த குளம் வறண்டே கிடப்பதால் கறம்பக்குடி பேரூராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே கறம்பக்குடி பெரிய குளத்தில் படர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கறம்பக்குடி.
மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை
புதுக்கோட்டை. மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் இரும்பாநாடு சிவன்கோவில் பிரிவு சாலைக்கு அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், இரும்பாநாடு
சேதமடைந்த குடிநீர் தொட்டி மூடிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு அருகேயுள்ள அணவயல் நெடுஞ்சாலை பகுதியில் இருந்து ஜீவா நகர் செல்லும் வழியில் உள்ள காவேரி கூட்டு குடிநீர் குழாய் செல்லும் தொட்டி தரையோடு தரையாக உள்ளது. இந்த தொட்டியின் மூடிகள் சேதமடைந்த நிலையில் உள்ளத. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை அனைவரும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டி மூடிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அணவயல்
தெருநாய்கள் தொல்லை
புதுக்கோட்டை நகாட்சி கடைவீதி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்கோட்டை