< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 July 2023 11:31 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

அாியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கும்பகோணம் செல்லும் சாலை தா.பழூர் பஸ் நிறுத்தும் அருகே தோப்பேரி செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால அந்த பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக ெசல்லும் மூக்ைக பிடித்து ெகாண்டு ெசல்கின்றனா். ேமலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு ேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்ைக ேவண்டும் என ேகட்டு ெகாள்கிேறாம்.

பொதுமக்கள், தோப்பேரி

சாக்கடை கால்வாய் அமைக்க கோரிக்கை

அரியலூர்மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் ஊராட்சி மாரியம்மன்கோவில் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தனியார் வங்கி பின்புறம் சரியான சாக்கடை கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்த்படப்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படுமா?

அரியலூர் அய்யன் ஏரி அருகே சித்தேரி வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஆங்காங்கே ஏராமான ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரைகளை சீரமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்.

நாய்களால் தொந்தரவு

அரியலூர் அரண்மனை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்.

கால்நடைகளால் தொல்லை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. இதனால் சிலர் படுகாயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.

மேலும் செய்திகள்