< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 July 2023 11:30 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பெரம்பலூர் சங்குபேட்டையில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடத்தின் அருகே உள்ள சிமெண்டு சாலைக்கு செல்லும் பாதையை சில ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்லும், கார், மோட்டார் சைக்கிள்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்றை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், அரணாரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2 ஓட்டு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் 2 ஒட்டு கட்டிடங்கள் உடைந்து காணப்படுகிறது. மேலும் ஜன்னல், கதவுகள் வலுவிழந்து உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீராஜ், அரணாரை.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் ஒன்றியம், அருமடல் கிராமத்தில் இருந்து செங்குணம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகி்ன்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், அருமடல்.

ஆனைவாரி ஓடையை சீரமைக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் மறந்துபோன நீர்நிலைகளில் ஒன்றாக ஆனைவாரி ஓடை விளங்குகறது. குன்னம், அந்தூர், அசூர், தங்க நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓடைகளாக உற்பத்தியாகி பிறகு ஒன்று சேர்ந்து துங்கபுரம் வழியாக அரியலூர் மாவட்டத்தில் நுழைந்து இறுதியாக வெள்ளாற்றில் கலக்கிறது. இந்த ஆனைவாரி ஓடையானது பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் இருந்த இடமே தெரியாத நிலையில் உள்ளது. ஆனைவாரி ஓடை மற்றும் அதன் கிளைகளை உரிய நிதி ஒதுக்கி முறையாக சீரமைப்பதோடு அருகாமையில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரைத் திருப்புவது தொடர்பாக ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்தவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரவணன்,துங்கபுரம்

சாலையில் சிதறி கிடக்கும் கற்கள்

பெரம்பலூர் - அரியலூர் சாலையில் தினமும் பல நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் இந்தச் சாலையில் செல்லும் கனரக வாகனங்களில் இருந்து விழும் சிறுகற்கள் ஆங்காங்கே சிதற கிடக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பதாசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருது, பெரம்பலூர்

மேலும் செய்திகள்