< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி செய்தி எதிரொலி: அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டது
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி செய்தி எதிரொலி: அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டது

தினத்தந்தி
|
30 Dec 2022 1:38 AM IST

தினத்தந்தி செய்தி எதிரொலியாக அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டது

அரவக்குறிச்சியில் உள்ள திண்டுக்கல் ரோடு, கரூர் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. மேலும் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளை பின்னால் துரத்தி சென்று கடிக்க வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று காலை அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்