சிவகங்கை
அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி
|அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள ராணி மதுராம்பாள் ராஜாயீ நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிலம்பப் பயிற்சி பெற்ற ரேமா பயிற்சி ஆசிரியராக கலந்துகொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிலம்பம் பயிற்சி வகுப்புகள் நடக்கிகிறது. இதனை ஆய்வு செய்வதற்காக பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து மற்றும் துணைத் தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் ராணி மதுராம்பாள் ராஜாயீ நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாநிதி சக்திவேல் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து மாணவிகளின் சிலம்பம் பயிற்சியை ஆய்வு மேற்கொண்டார். சிறப்பாக பயிற்சி வழங்கும் பயிற்சியாளர் ரேமாவை பாராட்டினார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் மற்றும் ராணி மதுராம்பாள் ராஜாயீ நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.