< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்வு.!
|1 Dec 2023 6:44 AM IST
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை,
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றன. அந்த வகையில் டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் ரூ.26.50 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதையடுத்து சென்னையில் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், தற்போது ரூ.26.50 உயர்ந்து ரூ.1,968.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.