< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
|25 Dec 2022 8:31 AM IST
வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்,
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு 230 கிலோமீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கு பகுதிகள் 360 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 480 கிலோமீட்டர்தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றறப்பட்டுள்ளது.