மாண்டஸ் புயல்: சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் ரத்து
|மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.