< Back
மாநில செய்திகள்
நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினத்தந்தி
|
9 Aug 2022 9:41 PM IST

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தீவிரம், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து சத்தீஷ்கர் மாநிலம் அருகே நாளை வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்