< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணம் - கரூர் வந்த பெண்ணுக்கு கலெக்டர் வரவேற்பு
|8 Jan 2023 6:55 PM IST
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கரூர்,
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேறும் வீராங்கனையான ஆஷா மால்வியா, நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சைக்கிள் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர் 1-ந்தேதி போபாலில் தனது பயணத்தை தொடங்கிய ஆஷா மால்வியா, 7-வது மாநிலமாக தமிழ்நாட்டில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தனது சைக்கிள் பயணத்தை மேற்கொள்வதற்காக வந்த ஆஷா மால்வியாவை, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.