< Back
மாநில செய்திகள்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் குறித்து சைக்கிள் பேரணி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் குறித்து சைக்கிள் பேரணி

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் குறித்து ஆரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

ஆரணி

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் குறித்து ஆரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறித்த சிறப்பு முகாம் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்படி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி, ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் ஆகியோர் ஆலோசனைப்படி ஆரணியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. தேர்தல் பிரிவு மண்டல துணை தாசில்தார் குமரேசன் தலைமை தாங்கினார்.மண்டல துணை தாசில்தார்கள் ரவிச்சந்திரன், சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஏ.நித்யா வரவேற்றார்.


இதில் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் ஆரணி தாலுகா அலுவலகத்திலிருநற்து பேரணியாக அணிவகுத்து சென்றனர். 18 வயது நிரம்பியவர்கள் கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும், தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்தும் கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் கோட்டை தெரு, பழைய பஸ் நிலையம், காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, சூரிய குளம் சாலை, நகராட்சி சாலை வழியாக மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடைந்தனர். முடிவில் ஆரணி நகர கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்