< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி
|15 Oct 2023 12:08 AM IST
புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டியில் வீரா்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் அண்ணா சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்முடன் கலந்து கொண்டனர். போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்க வளாகம் தொடங்கி ரெயில் நிலையம் ரவுண்டானா- மாலையீடு- சிவபுரம்-நமணசமுத்திரம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வரை மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. போட்டிகள் 13, 15, 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார்.