< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

தினத்தந்தி
|
11 Aug 2022 11:21 PM IST

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மானாமதுரை,

மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு 247 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகர செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர் ராஜமணி, நகராட்சி நகர்மன்ற கவுன்சிலர்கள் இந்துமதி திருமுருகன், செல்வகுமார், ராஜேஸ்வரி ராஜேந்திரன், சத்யா தர்மா, மேல பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவல்லி தேசிங்குராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்