< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
சைபர் கிரைம் போலீசாரின் விழிப்புணர்வு ஊர்வலம்
|2 Sept 2023 12:46 AM IST
மணமேல்குடியில் சைபர் கிரைம் போலீசாரின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மணமேல்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சைபர் குற்றங்கள் பற்றியும், சைபர் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், சைபர் குற்ற உதவி எண் 1930 குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கடைவீதி வழியாக பள்ளியை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் மாணவர்கள் சைபர் குற்றத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம், மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.