திருவண்ணாமலை
இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
|திருவண்ணாமலையில் இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் இணைய வழி குற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
பள்ளி மாணவிகள் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்கு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசுகையில், செல்போன் எண்களுக்கு வரும் ஓ.டி.பி. எண்களை யாரிடமும் கூற வேண்டாம். எந்த ஒரு இணையதளத்திலும் வேலைக்காக பணம் செலுத்த கூடாது.
தங்களின் ஏ.டி.எம். பின் எண், ஜி-மெயின் ஐ.டி., முகநூல், நெட் பேங்கிங் ஆகியவற்றின் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர கூடாது. சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்களை பதிவேற்ற செய்ய கூடாது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, நகராட்சி பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.