நாமக்கல்
பகுதிநேர வேலை தேடிய பெண்ணிடம்ஆன்லைனில் ரூ.9.31 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
|நாமக்கல்லில் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடிய பெண்ணிடம் ரூ.9 லட்சத்து 31 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுதிநேர வேலை
நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தீபா (வயது 35). தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்தார்.
அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்தது. அதில் கொடுக்கப்பட்ட டாக்ஸ்கை செய்து முடித்தால் கூடுதல் பணம் கிடைக்கும் எனவும், அதற்கு முன்பணமாக குறிப்பிட்ட தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.9.31 லட்சம் மோசடி
அதை உண்மை என நம்பி, 9 முறை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு தீபா பணத்தை அனுப்பி உள்ளார். தனக்கு வர வேண்டிய பணத்தை கேட்டபோது, மேலும் டாஸ்க் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த தீபா இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில், ரூ.9 லட்சத்து 31 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.