< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சயனைடு மது..! - இருவர் உயிரிழந்த விவகாரம் - இருவர் கைது
|14 Jun 2023 12:37 AM IST
மயிலாடுதுறையில் மதுவில் சயனைடு கலந்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுவில் சயனைடு கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுவில் சயனைடு கலந்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.