< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே அசாம் மாநில வாலிபருக்கு வெட்டு
|19 April 2023 2:23 PM IST
மறைமலைநகர் அருகே அசாம் மாநில வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் லால்சாய் (வயது 23), இவர் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணி முடிந்து இரவு வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் லால்சாய்யை திடீரென வழிமறித்து கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த லால்சாய்யை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாம் மாநிலத்தை சேர்ந்த லால்சாயை முன் விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கத்தியால் வெட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.