< Back
மாநில செய்திகள்
ஸ்டூடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர்
மாநில செய்திகள்

ஸ்டூடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
9 Aug 2022 12:07 AM IST

கூத்தாநல்லூர் அருகே ஸ்டூடியோ உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே ஸ்டூடியோ உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போட்டோ ஸ்டுடியோ

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடவேற்குடி, நாடார் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது29).இவர் வடபாதிமங்கலம் கடைவீதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், வடபாதிமங்கலம், மாயனூரைச் சேர்ந்த சிவபாலன் (29) என்பவர், தனக்கு தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார்.

அதன்படி, மகேந்திரன் திருமணம் விழாவை போட்டோ எடுத்ததுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் ஆல்பம் தயார் செய்ய ரூ.70 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ரூ.10 ஆயிரம் மட்டுமே முன்பணம் கொடுத்ததாக ெதரிகிறது.

தகராறு

இந்த நிலையில் சிவபாலன், மகேந்திரன் கடைக்கு சென்று திருமணம் ஆல்பம் கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரன் ரூ.70 ஆயிரத்திற்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார்கள். மீதி பணம் தந்தால்தான் ஆல்பம் தயார் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு சிவபாலன் முதலில் ஆல்பத்தை தருமாறும், மீதி பணத்தை பின்னர் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிவபாலன் தகராறு செய்து விட்டு ெசன்றுவிட்டார்.

அரிவாள் வெட்டு

பின்னர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் திட்டச்சேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சிவபாலன் மற்றும் அவரது நண்பர்கள் அரிச்சந்திரபுரம், மெயின்ரோட்டுத் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (40), கிளியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன்குமார் (22), நத்தம் கிராமத்தை சேர்ந்த அருண்பிரபு ஆகிய 4 பேரும் சேர்ந்து வழி மறித்து மகேந்திரனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர், திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாலன், சிலம்பரசன், நவீன்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளஅருண்பிரபுவை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்