< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு

தினத்தந்தி
|
1 May 2023 12:30 AM IST

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி நகரில் இடி, மின்னலுடன் திடீர் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதையொட்டி ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதேபோல் மாவட்டத்தில் பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்தது.

மேலும் செய்திகள்