< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மின்சாரம் திருடினால் குண்டாஸ் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
|19 April 2023 8:03 AM IST
மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வனப்பகுதியில் விவசாய நிலங்களுக்கான மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மின்சார வேலியில் சிக்கி, யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்வேலிகள் அமைப்பது தொடர்பான வரைவு விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், வனப்பகுதி விவசாய நிலங்களுக்கான மின்வேலிகளுக்கு மின்சாரம் திருடப்படுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.