< Back
மாநில செய்திகள்
குறுவை சாகுபடி பணிகள் மும்முரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

குறுவை சாகுபடி பணிகள் மும்முரம்

தினத்தந்தி
|
13 July 2022 6:43 PM IST

குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி, சித்தமல்லி, மேலபூவனூர், பெரம்பூர், அனுமந்தபுரம், ஒளிமதி, தேவங்குடி, ராயபுரம், காளாஞ்சிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பம்பு செட் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி முன்கூட்டியே குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். சில கிராமங்களில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடியை தற்போது தொடங்கி உள்ளனர். முன் கூட்டியே பம்புசெட் மூலம் சாகுபடி தொடங்கப்பட்ட காளாச்சேரி, மேல பூவனூர் உள்ளிட்ட இடங்களில் மேல் உரம் இடும் பணியை விவசாயிகள் மும்முரமாக தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்