< Back
மாநில செய்திகள்
மிளகாய், பருத்தி பயிரிட  நிலங்களை தயார் செய்த விவசாயிகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மிளகாய், பருத்தி பயிரிட நிலங்களை தயார் செய்த விவசாயிகள்

தினத்தந்தி
|
17 Sept 2023 12:15 AM IST

பருவமழை சீசனை எதிர்பார்த்து முதுகுளத்தூர் அருகே மிளகாய், பருத்தி விவசாயத்திற்காக விவசாய நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் விவசாயிகள் வைத்துள்ளனர்.

முதுகுளத்தூர்

பருவமழை சீசனை எதிர்பார்த்து முதுகுளத்தூர் அருகே மிளகாய், பருத்தி விவசாயத்திற்காக விவசாய நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் விவசாயிகள் வைத்துள்ளனர்.

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்தே விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குவார்கள். அது போல் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட மிளகாய், பருத்தி விவசாயமே அதிகமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் மிளகாய், பருத்தி விவசாயம்தான் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய தாளியாரேந்தல், மட்டியாரேந்தல், செங்கற்படை, கருமல், ஆதங்கொத்தங்குடி, தேரிருவேலி, மிக்கேல்பட்டினம், கீழச்சிறுபோது உள்ளிட்ட பல கிராமங்களிலும் மிளகாய் மற்றும் பருத்தி விவசாயத்திற்காக விவசாயிகள் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழவு செய்து பருவமழை எதிர்பார்த்து விவசாயிகள் தயார் நிலையில் விவசாய நிலங்களை வைத்துள்ளனர்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

இது குறித்து தேரிருவேலி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய மழை பெய்யாததால் பருத்தி, மிளகாய் விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டாவது பருவமழை சீசனில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பிலேயே விவசாய நிலங்களில் உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்