< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'கியூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
|16 July 2023 12:21 AM IST
‘கியூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த கியூட் நுழைவுத்தேர்வுக்கு நாடு முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான தேர்வு கடந்த மே மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. 19 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். தமிழ் உள்பட 13 மொழிகளில் இந்த கியூட் தேர்வு நடந்தது. தமிழில் 8 ஆயிரத்து 421 பேர் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவை, தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று வெளியிட்டு இருக்கிறது.
தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.