< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடலூர் : சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்
|29 Jun 2023 4:03 PM IST
சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
கடலூர்,
கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு செவிலியர்களின் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த 12 வயது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பான செய்தி வெளியானது.
இந்நிலையில், சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர் கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.