< Back
மாநில செய்திகள்
கடலூர்: மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கடலூர்: மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

தினத்தந்தி
|
3 July 2022 8:22 PM IST

தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தினால் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன.

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதால் மீனவ கிராமங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ரத்து செய்யப்படும் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்