< Back
மாநில செய்திகள்
கடலூர்: வாகன சோதனையின் போது விபத்து - போக்குவரத்து எஸ்.ஐ உட்பட 2 சிறுவர்கள் காயம்
மாநில செய்திகள்

கடலூர்: வாகன சோதனையின் போது விபத்து - போக்குவரத்து எஸ்.ஐ உட்பட 2 சிறுவர்கள் காயம்

தினத்தந்தி
|
2 April 2023 4:21 PM IST

பண்ருட்டி அருகே வாகன சோதனையின் போது போக்குவரத்து காவலர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் சாலையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முயற்சித்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதினார்கள். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்ட ர் சிவக்குமார், மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்களும் பலத்த காயமடைந்தனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் 3 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் போக்குவரத்து போலீசாருக்கு பயந்து வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சிறுவர்கள் கொலை செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகள்