< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடலூர் : சிவனார்புரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
|5 March 2023 5:47 PM IST
சிவனார்புரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடோன் தரைமட்டமானது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிவனார்புரம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குடோன் தரைமட்டம் ஆனது.
மேலும் இந்த விபத்து காரணமாக 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் 80% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.