< Back
மாநில செய்திகள்
கடலூர்: கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார் - கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் பலி
மாநில செய்திகள்

கடலூர்: கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார் - கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் பலி

தினத்தந்தி
|
15 July 2022 9:46 PM IST

கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டுக்குள் புகுந்த விபத்தில் பெண் உயிரிழந்து உள்ளார்.

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து புவனகிரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் வளையமாதேவி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வளையமாதேவி ரைஸ்மில் அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி சுமதிக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இவரை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதனால் இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மைக்கில் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்