< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
ஆம்புலன்சில் குவா குவா
|29 Jun 2023 9:59 PM IST
ஒடுகத்தூர் அருகே கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
ஒடுகத்தூரை அடுத்த முத்துக்குமரன் மலை பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 30), கூலி தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கவுதமி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் பரந்தாமன் ஓட்டி வந்தார். அப்போது, வழியிலேயே பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் சண்முகம் பிரசவம் பார்த்தார். அதில் கவுதமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர், தாயையும், குழந்தையையும் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.