< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அசன பண்டிகை
|5 Dec 2022 1:50 AM IST
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அசன பண்டிகை நடந்தது.
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று அசன பண்டிகை நடந்தது. இதையொட்டி காலை தேவாலய ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையில் நற்கருணை ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையில் உதவி ஆயர் கிருபாவதி ஸ்டெல்லா மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அசன விருந்து வழங்கப்பட்டது. இதில் பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு, உணவு அருந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அசன கமிட்டியினர் செய்திருந்தனர்.