கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி -விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு
|மகேந்திரகிரியில் இஸ்ரோ ஆய்வு மையத்தில் சி.இ.20 இ9 கிரியோஜெனிக் இன்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கிரியோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு பரிசோதனை பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மகேந்திரகிரி ஆய்வு மையத்தின் வளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி, இணை இயக்குனர் ஆசீர் பாக்யராஜ், துணை இயக்குனர் நாராயணன் ஆகியோர் தலைமையில் சி.இ.20 இ9 கிரியோஜெனிக் இன்ஜின் பரிசோதனை 659 வினாடிகளுக்கு நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ராக்க்கெட் 22.2 டன் எடையை தாங்கிச் செல்லும் என்றும், தற்போதைய பரிசோதனை வெற்றியடைந்ததன் மூலம் கூடுதலாக 500 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சோதனையை காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், மகேந்திரகிரி ஆய்வு மைய விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டினார்.