< Back
மாநில செய்திகள்
ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

தினத்தந்தி
|
9 Oct 2023 10:00 PM GMT

மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.

பணகுடி:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜினிக் என்ஜின் தயார் செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான 'சிஇ-20' என்ற கிரையோஜெனிக் என்ஜின் சோதனை நேற்று நடைபெற்றது. 22 டன் எடை உந்தும சக்திக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 125 வினாடிகள் நடந்தது.

இதில் ராக்கெட்டின் உந்தும சக்தி, வெப்பம் தாங்கும் சக்தி உள்ளிட்ட காரணிகள் சோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். ககன்யான் விண்வெளி திட்டத்தில் எல்.எம்.வி-3 ராக்கெட்டின் மேல் நிலைக்கு சக்தி அளிக்கும் வகையில் 'சிஇ-20' கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்