கொடூரம்...! 5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்...! சிறுவர்கள் அட்டகாசம்...!
|14 வயது முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள், செல்போனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்
விழுப்புரம்
சமூகத்தில் பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. திரைப்பட வசனங்கள் சொல்வது போல் தாயின் வயிற்றை தவிர பெண்களுக்கு சமூகத்தில் எங்கும் பாதுகாப்பு இல்லை.வீட்டிலோ, பள்ளியிலோ, அலுவலகத்திலோ அவளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.
விழுப்புரம் பகுதியில் வசிக்கும் சுமார் 6 வயதுடைய 4 சிறுமிகள் மற்றும் வடமாநில தொழிலாளி ஒருவரின் 6 வயது மகள் உள்பட 5 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 14 வயது முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள், செல்போனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
ஜானகிபுரம் அருகே வசிக்கும் சிறுமி 2ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தினமும் மிகவும் உற்சாகமாக பள்ளிக்குச் செல்வாள். இப்படிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் அவளுக்கு உடம்பு சரியில்லை உற்சாகமின்றி இருந்து உள்ளார். பெண் ஆசிரியை சிறுமியிடம் விசாரித்து உள்ளார். சிறுமி பாலியல் கூறியதை கேட்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்தார். அதிகாரி அங்கு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், சம்பவம் குறித்து அதிகாரிகளும், போலீசாரும் விசாரணையை தொடங்கினர். சிறுமி வசிக்கும் பகுதியில் வசிக்கும் 14-17 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த சிறுமிக்கு மட்டுமின்றி மேலும் நான்கு சிறுமிகள் மீதும் இதுபோன்ற கொடுமைகளை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.கடலூரில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.