< Back
தமிழக செய்திகள்
கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் - 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
தமிழக செய்திகள்

கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் - 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தினத்தந்தி
|
10 Jun 2023 4:52 PM IST

கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக‌ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திண்டுக்கல்,

கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார விடுமுறையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெப்பத்தை சமாளிக்கவும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக கொடைக்கானலின் நுழைவு பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மலைச்சாலையில் ஊர்ந்தபடி பயணத்தை தொடர்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்