< Back
மாநில செய்திகள்
வாரச்சந்தையில் அலைமோதிய பொதுமக்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

வாரச்சந்தையில் அலைமோதிய பொதுமக்கள்

தினத்தந்தி
|
16 Oct 2023 11:26 PM IST

அரியலூர் வாரச்சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அரியலூர் நகரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் சாலையோரத்திலும், உழவர் சந்தையிலும் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருட்களை வாங்குவதற்காக அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் அரியலூருக்கு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வாரசந்தையில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. உழவர் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பழக்கடைகள் உள்பட பலதரப்பட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றதையும், சாலையோரம் சாரைசாரையாக நிறுத்தப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

மேலும் செய்திகள்