< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:59 AM IST

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட நீதித்துறை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தலைவர் கோபிநாதராவ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் சட்ட ஆலோசகரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான குணசேகரன், மாவட்ட இணை செயலாளர் ரியாஸ், மாவட்ட மகளிரணி பத்மாவதி, பேபிநளினி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில், சங்க நிர்வாகிகள் அமிர்தம், பரிமளம், வெங்கடேசன், சங்கர், கவுஸ்கான், துரைபாண்டியன், சிக்கந்தர்பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அரசு பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியினை தற்போது வழங்கப்படும் ரூ.50 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் சரயுவிடம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்