< Back
மாநில செய்திகள்
காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2023 10:57 PM IST

காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடந்தது.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் பையூர் ரவி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏரி, குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை ஏரிகளின் கரையோரங்களில் பாதுகாப்புக்காக வைக்க வேண்டும், குடிநீர் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் மூலம் மருந்து தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்