< Back
மாநில செய்திகள்
மின்மாற்றி பழுதால் தண்ணீர் இன்றி கருகும் ெநற்பயிர்கள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மின்மாற்றி பழுதால் தண்ணீர் இன்றி கருகும் ெநற்பயிர்கள்

தினத்தந்தி
|
8 Sept 2023 12:43 AM IST

மின்மாற்றி பழுதால் தண்ணீர் இன்றி ெநற்பயிர்கள் கருகி வருகின்றனர்.

அரிமளம் ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி பூவம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கன மழையால் மின்மாற்றி பழுது ஏற்பட்டது. இதையடுத்து மின்மாற்றி பழுது தொடர்பாக பூவம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடியாபட்டி மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து மின்சார வாரிய பணியாளர்கள் மின்மாற்றி பழுதை நீக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை மின்மாற்றி பழுது நீக்கம் செய்யப்பட்டு மின்கம்பத்தில் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதியில் 10 ஏக்கர் அளவில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுகின்றன. வளர்ந்த சவுக்கு மரங்களும் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சம்பா பருவத்திற்காக நாற்று நடவு செய்துள்ளனர். விவசாயிகள் அந்த நாற்றுகளை பராமரிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் உள்ளது. உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சரி செய்து கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்