ராமநாதபுரம்
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்-பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
|வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சாயல்குடி
கடலாடியில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கடலாடி பா.ஜனதா வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கருப்பசாமி, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாடு பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் இளையராஜா சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. எனவே விவசாயிகளுக்கு வறட்சி மற்றும் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரத்துக்கால்வாய்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நாடாளுமன்றத்தை திறந்ததற்கு பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலுசாமி, முருகன், ஒன்றிய செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், மாணிக்க மீனாள், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் விக்னேஸ்வரன், சமூக ஊடகப் பிரிவு ஒன்றிய தலைவர் முருகநாதன், கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஹரிஹரன், பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் முருகக்கனி, நிர்வாகிகள் வேல்முருகன், பூமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.