< Back
மாநில செய்திகள்
வெண்ணாற்றில் முதலை நடமாட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வெண்ணாற்றில் முதலை நடமாட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2022 1:26 AM IST

வெண்ணாற்றில் முதலை நடமாட்டம்

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரானது தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணை வந்தவுடன் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் திறந்து விடப்படுகிறது. தொடர் மழையால் காவிரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதில் தப்பிய முதலைகள் வெண்ணாற்றில் உலவுவதாக வனத்துறை எச்சரிக்கை பதாகையை வெண்ணாற்று தடுப்பணை அருகே வைத்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை பள்ளியக்ரகாரம் வெண்ணாற்றில் முதலைகள் நடமாடி வருகின்றன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்