பெரம்பலூர்
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூரில் துறைமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ரவிகரண் (வயது 30). இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி வழக்கு, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் ரவிகரண் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரம்பலூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான ரவிகரணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்திரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் கற்பகம் உத்திரவின் பேரில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிகரண் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், ரவிகரணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.