< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
|18 Feb 2023 10:14 AM IST
ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளையும் போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை,
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ75 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை (ஆரிப்,ஆசாத்) தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விமானம் மூலம் அவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.